Corona Virus in Bigg Boss 5 Set

தமிழ் பிக்பாஸ் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona Virus in Bigg Boss 5 Set : வெளிநாடுகளில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

அதற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் ஃபிலிம் சிட்டி ஒன்றில் நடந்து வருகிறது. செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும் இந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.