Corona Test For CM
Corona Test For CM

முதல்வர் இபிஎஸ் கொரோனா இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corona Test For CM : சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அதிமுகவைச் சேர்ந்த எம் எல் ஏக்கள் போன்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிமுகவைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் OTT-யில் வெளியாகும் ராகவா லாரன்ஸுன் பிரம்மாண்ட திரைப்படம் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவர்களைத் தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமிக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கொரானாவால் பாதிக்கப்பட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி சமீபத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் அவருக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.