Corona

மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரானா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Corona Status in Tamilnadu : இந்தியாவில் பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு அதிகமாகி வருவது ஒருபுறம் இருந்தாலும் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உச்சத்தை தொட்டு வருவது அனைவருக்கும் மிகப்பெரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் குணமடைந்து வரும் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது அதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம் வாங்க.

மதுரை :

மதுரை மாவட்டத்தில் இதுவரை 11,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8423 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 237 பேர் பலியாகி உள்ளனர்.

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 7865 பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 4957 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 85 பேர் பலியாகியுள்ளனர்.

தேனி :

தேனி மாவட்டத்தில் இதுவரை 5028 பேர் கொரானா இருக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 2786 பேர் குணமடைந்து உள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டத்தில் 2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2147 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையிலான உயிரிழப்பு 50 ஆக பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3255 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2557 பேர் குணமடைய 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கை :

சிவகங்கை மாவட்டத்தில் 2365 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1872 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 43 பேர் கொரானாவிற்கு பலியாகியுள்ளனர்.

திருநெல்வேலி :

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5212 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 2,948 பேர் குணமடைந்துள்ளனர். 38 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 6052 பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 4068 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையிலான உயிரிழப்பு 62 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொரானா பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.