Corona Recovery Rate in Tamilnadu
Corona Recovery Rate in Tamilnadu

தமிழகத்தில் இதுவரை 1.96 லட்சம் பேர் கொரொனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corona Recovery Rate in Tamilnadu : இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் கொரானா தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் 1.96 லட்சம் பேர் கொரனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது வரை 57,000 பேர் மட்டுமே கொரானாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலேயே நம்பர் 1.. கொரானா சிகிச்சையில் சிறந்து விளங்கும் தமிழகம்!

இதுவரை தமிழகத்தில் 27.79 லட்சம் பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 2.57 லட்சம் பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த மாவட்டங்களில் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை முழுவீச்சில் இறங்கியுள்ளது.

தமிழக அரசுக்கு மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.