Corona Recovery Rate in Tamilnadu
Corona Recovery Rate in Tamilnadu

தமிழகத்தில் கொரானா பாதிப்பிலிருந்து குணமடைந்து வரும் எண்ணிக்கை 4.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

Corona Recovery Rate in Tamilnadu : சீனாவில் கடந்த வருடம் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி உயிர் சேதத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐம்பது இலட்சத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி இருந்தாலும் இதுவரை இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொடுத்து வரும் சிகிச்சை மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு எடுத்து வரும் துரிதமான நடவடிக்கைகள் காரணமாக குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 5,752 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் 5,799 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.

கூகுள் பரிந்துரையின்படி, நட்சத்திரத்திற்கு தமிழ் நடிகையின் பெயரை சூட்டிய நாசா!! நடிகைக்கு குவியும் வாழ்த்து மழை!!!

தற்போது தமிழகத்தில் 46,912 பேர் மட்டுமே கொரானா பாதிப்புக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று மட்டும் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,49,583 ஆக உயர்ந்து இருந்தாலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,36,155 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பத்தாயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து கணிசமாக குறைந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 100க்கு மேல் கடந்து வந்த நிலையில் தற்போது அது குறைந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் கொரானா பாதிப்பால் 53 பேர் பலியானார்கள். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தால் விரைவில் தமிழகம் கொரானா இல்லாத மாநிலமாக மாறும் என நம்பலாம்.