Corona Recovery Rate Doubles in Chennai
Corona Recovery Rate Doubles in Chennai

சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எண்ணிக்கை ஜூலை மாதத்தில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

Corona Recovery Rate Doubles in Chennai : சீனாவிலிருந்து உலக நாடுகள் அனைத்திலும் பரவத் தொடங்கிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியா முழுவதும் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னையில் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. இதுவரை சென்னையில் 85.5% பேர் கொரானா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.

கைமாறிய தளபதி 66.. அஜித் ஸ்டைலில் தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு – இனி எல்லா படமும் இப்படி தான்.!!

பாதிப்பு அதிகமாக இருந்த மண்டலங்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன‌. தற்போது தென் சென்னையில் மட்டுமே கொரானா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக அம்பத்தூர் தொகுதி அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த தொகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கார்பரேஷன் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அறிகுறி எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்து வருகின்றனர்.

இதனால் அம்பத்தூர் தொகுதியில் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பாதிப்பு விகிதம் 5 சதவீதம் குறையும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து முழு வீரியத்துடன் பரிசோதனைகள் நடக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

நாளன்றுக்கு 2400 வரை தாண்டி வந்த சென்னை கொரானா பாதிப்பு தற்போது 1200 ஆக குறைந்துள்ளது. தற்போது 12% பேர் மட்டுமே கொரானா சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.