Corona Virus in Chennai

தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் சரசரவென்று குறைந்து கொண்டே வருகிறது.

Corona Positive Cases Details in Chennai : இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி இருந்தது.

ஆரம்பத்தில் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய கொரானா தமிழக அரசின் அதிதீவிர நடவடிக்கைகளாலும் சிறந்த மருத்துவத்தாலும் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

100 சோதனைகளுக்கு பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கைக்கான விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னையின் கோவிட் -19 டெஸ்ட் பாசிட்டிவிட்டி வீதம் (டிபிஆர்) ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) அன்று வெறும் 7% மட்டுமே என்று கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை 14,027 சோதனைகள் செய்யப்பட்டன. 986 பேர் மட்டுமே பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 7 அன்று சோதனை நேர்மறை விகிதம் 8% ஆக இருந்தது. ஆகஸ்ட் 6 அன்று இது 9.4% ஆக இருந்தது. தற்போது 7% ஆக குறைந்துள்ளது.

ஆகஸ்ட் இறுதிக்குள் சென்னை 6.5% TRP-ஐ இலக்காகக் கொண்டுள்ளது என்று கிரேட்ட்டர் சென்னை கார்பரேஷன் ஆணையர் ஜி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.