சிம்புவுக்கு வில்லனாக சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Corona Kumar Villian Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதை படங்களைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரானா குமார் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக உள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது படத்தில் சிம்புவுக்கு வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.