Corona Injection Release Update
Corona Injection Release Update

Corona Injection Release Update : சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்விற்பனைக்கு வரும் என்று சீனாவின் சைனா ஃபார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது சோதனைக்கு உட்படுத்த உட்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் மாதம் இறுதியில் சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும்.

ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்காக இரு தடுப்பூசிகளின் விலை இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் செலவாகும். சீனாவில் வசிக்கும் 140 கோடி பேருக்கும் அந்த தடுப்பூசி போடவேண்டும் அவசியமில்லை. மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கு அந்த தடுப்பூசி அவசரத் தேவையாக உள்ளது.

மக்கள் நெருக்கம் குறைந்த தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படாது என்று அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

கொரோனா நோய்தொற்று முதல்முறையாக பரவத் தொடங்கிய சீனாவில் புதன்கிழமை நிலவரப்படி 84,888 பேருக்கு அந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 76,685 நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 4,634 நோய் பாதிப்பால் உயிர் இழந்தனர், 569 தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.