15 மாத குழந்தை முதல் பாட்டி வரை 14 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாஸ்டர் பட பிரபலம் தெரிவித்துள்ளார்.

Corona Affection in Rathnakumar Family : தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ ரத்தினகுமார். இந்த படத்தினை தொடர்ந்து அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கினார்.

15 மாதக் குழந்தை முதல் பாட்டி வரை 14 பேருக்கு கொரானா - மாஸ்டர் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த சோகம்

ஆடை திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் திரைக்கதை அமைத்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார். தற்போது பரவிவரும் கொரானா வைரஸ் தொற்றால் இவரது குடும்பத்தில் மொத்தம் 14 பேர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர்.

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை மொத்தம் 14 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

15 மாதக் குழந்தை முதல் பாட்டி வரை 14 பேருக்கு கொரானா - மாஸ்டர் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த சோகம்