புதிய போஸ்டர் ஒன்றை கூலி படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் ஸ்ருதிஹாசன், உபேந்திரா ,சத்யராஜ், மகேந்திரன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் நேற்று சௌபின் ஷாஹிர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அந்த வகையில் இன்று நாகார்ஜுனாவின் புகைப்படத்தை போஸ்டர் உடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.