
சிம்புவின் திருமணம் குறித்து கூல் சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் என்.கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் வரும் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரும் பிரபல நடிகருமான கூல் சுரேஷ் அவரது பாணியில் இப்படத்திற்கான பிரமோஷனை பிசியாக செய்து வருகிறார்.

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைப் போல் இப்படமும் வெற்றி பெற வேண்டும் என மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 தேங்காய் உடைத்து கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார்.

அதன் பின்பு பேட்டியாளர்களை சந்தித்த கூல் சுரேஷ்,பத்து தல திரைப்படம் வெற்றி பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும், STR இன் பத்துதல..! சிம்பு ரசிகர்கள் கெத்து தல..! என்று வழக்கம்போல் கோஷம் விட ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இதன் பின் சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் கூல் சுரேஷ் சிம்புவிற்கு திருமணம் நடந்தால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தான் நடக்கும். அப்படியாகவே டி.ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.