ஐபோன் பரிசளித்த தயாரிப்பாளருக்கு கூல் சுரேஷ் கொடுத்த கிப்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படத்தை வேற லெவல் ப்ரோமோஷன் செய்தார். எங்கு போனாலும் வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு என டயலாக் பேசி டிரெண்டானார்.

இந்த நிலையில் வெந்து அணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றியடைந்த காரணத்தினால் தயாரிப்பாளர் சிம்புவுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக்கை பரிசாக வழங்கினார்.

மேலும் படத்தை ப்ரமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு ஆப்பிள் ஐபோன் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கூல் சுரேஷ் தயாரிப்பாளருக்கு ஒரு பரிசை திருப்பி வழங்கியுள்ளார். அதாவது வெந்து தணிந்தது காடு, ஐசரி கணேஷுக்கு வணக்கத்தை போடு என்ற டயலாக்குடன் குச்சி மிட்டாயை பரிசாக வழங்க அதனை தயாரிப்பாளர் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டுள்ளார்.

இது குறித்த போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.