திரையரங்கிற்கு ஆட்டுக்குட்டியுடன் வந்துள்ளார் கூல் சுரேஷ்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்டமாக இன்று வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் யூடியூப் சூப்பர் ஸ்டார் என மக்களிடையே செல்லமாக அழைக்கப்படும் கூல் சுரேஷ் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் படத்திற்கு ஏற்றார் போல் கெட்டப் போட்டுக் கொண்டு வந்து ரிவ்யூ கொடுப்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் கோட் படத்தை பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்துள்ளார் போல் சுரேஷ். மேலும் ஆட்டை தோள் மேலே தூக்கிக் கொண்டு ஆடும் டா மச்சான் ஆடுங்கடா என்று விஜய் சார் படம் பார்த்து ஆடுங்கடா என்று பாடி டான்ஸ் ஆடியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.