Cooku With Comali Shivangi Keyboard Play With Karthi

Karthi-யுடன் சேர்ந்து Keyboard வாசித்த Cooku With Comali Shivangi..! | Latest News | Kalakkalcinema

Actress Shakeela in Manimegalai Home : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை. பல வருடங்கள் சன் டிவியில் பணியாற்றிய இவர் டான்ஸ் மாஸ்டர் உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக மணிமேகலை தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் உடலில் சுடுதண்ணீரை ஊற்றி கொண்டார். இதனால் இரண்டு வாரங்களுக்கு குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் நடிகை ஷகீலா மணிமேகலையை அவரது வீட்டில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிமேகலை தனக்காக தன் வீட்டிற்கு வந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய பாசிட்டிவ் வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Karthi-யுடன் சேர்ந்து Keyboard வாசித்த Cooku With Comali Shivangi..!