குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Cook With Comali2 Kondattam : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. முதல் சீசன் பெரிய வெற்றியைப் பெற்றது தொடரில் 2வது சீசன் ஒளிபரப்பாகி அதைவிட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலக அளவில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் கோமாளிகளுக்கு தனித்தனியாக ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததால் வருத்தப்படாத ரசிகர்களே இல்லை.

குக்கு வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி தகவல்.!

இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கொக்கு வித் கோமாளி 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் அந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.