தளபதி 65 படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Cook With Comali Pavithra About Thalapathy65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து குக் வித் கோமாளி பவித்ரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பவித்ரா கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டபோது இது குறித்து கேட்கப்பட்டது.

இதையே நீங்கள் சொல்லி தான் நான் கேள்விப்படுகிறேன் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இந்த கேள்வியை கேட்ட பத்திரிகையாளரிடம் இது மட்டும் நடந்து விட்டால் உங்களுக்கு தனியாக ட்ரீட் தருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பவித்ராவின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.