Cook With Comali New Gettups

கார்ட்டூன்ஸ் கெட்டப்பில் மாறிய குக் வித் கோமாளிகள்.

Cook With Comali New Gettups : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாட உள்ளனர்.

இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் முதல் கோமாளிகள் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்.

கோமாளிகள் ஆன பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்கள் என்றும் கூறலாம்.

தற்போது கோமாளிகள் ஸ்பைடர் மேன், சின் சான், டோரா, சூப்பர் மேன், போன்ற வேடங்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளனர்.

இந்த வாரம் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்