மணிமேகலை புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களில் கோமாளியாக இருந்த மணிமேகலை, நான்காவது சீசன் பாதியிலிருந்து தொகுப்பாளராக இருந்தார். ஐந்தாவது சீசனிலும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில் சமீபத்தில் தொகுப்பாளராக வந்த குக் என்னை வேலை செய்ய விடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இதன் காரணமாக இந்த சீசனில் இருந்து வெளியேறப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்தப் பதிவு இணையத்தில் ஒரு பேசும் பொருளாக மாறி இருந்தது.
இந்நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல் மற்றும் தன்னம்பிக்கை கொடுத்த நிலையில் தற்போது அவர் கெத்தான புகைப்படத்துடன் விஐபி படத்தின் பாடலை போட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஊக்கத்தை கொடுத்து பாராட்டி வருகின்றனர்.