கழுத்தில் தாலி இல்லையே என ரசிகர் கேட்டதற்கு அதிலும் கலாச்சாரமே இல்லை என பதிலளித்துள்ளார் குக் வித் கோமாளி கனி.

Cook With Comali Kani Live : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கனி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான இவர் இயக்குனர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நினைத்தது நிறைவேற, பெண்களின் வழிபாடு.!

கழுத்தில் தாலி இல்லையே?? ரசிகரின் கேள்விக்கு குக் வித் கோமாளி கனி கொடுத்த பதில் - அது நம்ம கலாச்சாரமே இல்லை.!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கிய தொடர்ந்து இமேஜ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் புடவை கட்டிக்கொண்டு செம அழகா இருக்க ஒரு வீடியோவை வெளியிட கழுத்தில் தாலி இல்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இதனையடுத்து யூடியூப் வீடியோ லைவ் பதிலளித்துள்ள கனி. திருமணத்தின் போது என் புருஷன் கட்டின தாலியை என் உயிர் போல பாதுகாத்து வருகிறேன். அதன் பிறகு அவர் கட்டாத தாலி எதற்கு என கழட்டி வைத்து விட்டேன்.

மேலும் தாலி கட்டுவது என்பது நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்று. அது இடையில் தான் வந்தது. அதற்கு முன்னர் மாலை மாற்றிக்கொண்டு இவனுக்கு இவல் இவளுக்கு இவன் என முடிவு செய்து விடுவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் புகைப்படத்திற்கு மட்டும் தாலியை எடுத்து மாட்டிக் கொள்வது எனக்கு பிடிக்காது. அதனால்தான் இப்போதும் அதை அணிவதில்லை என கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார்.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!