செம்ம மாஸாக வெளியாகியுள்ளது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ப்ரோமோ வீடியோ.
Cook With Comali 3 Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குக் மற்றும் கோமாளி என இருவருக்கும் திரைத் துறையில் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
விரைவில் 3ஆம் சீசன் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கோமாளிகளாக பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா ஆகியோர் மட்டுமே பங்கேற்று இருப்பது தெரியவந்துள்ளது. புகழ் பங்கேற்காமல் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.