குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர் குறித்து தெரிய வந்துள்ளது.

Cook With Comali 3 Contestant List : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் இவை இரண்டுமே மக்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனை அடுத்து விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி, அர்ச்சனா மற்றும் பிக்பாஸ் விஜயலட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்த கையோடு குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.