viswasam-bigil
விஸ்வாசம் வசூல் குறித்து தயாரிப்பாளர் தனச்செயன் பேட்டி ஒன்றில் பேசிய பேச்சு காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மற்றும் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி இருந்தன.

ஆனால் இருதரப்பு ரசிகர்களுமே மாறி மாறி இந்த படத்தின் வசூல் பொய், அந்த படத்தின் வசூல் பொய் என பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் போப்டா தனச்செயன் பேட்டி ஒன்றில் கூறிய விசயங்கள் சமூக வளையதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிகில் ரூ 80 கோடி வரை ஷேர் கொடுத்திருப்பதாகவும் விஸ்வாசம் உண்மையா என நமக்கு தெரியாது. விநியோகிஸ்தர் சொன்னா நாம நம்பி தான் ஆகணும் என கூறி இருந்தார்.

இதே போல் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விஸ்வாசம் வசூல் உண்மை என நிரூபித்தால் அவர்களுடன் சேர்ந்து கொண்டாட தயார் எனவும் ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் விஸ்வாசம் வசூல் உண்மை தான்.ஏற்கனவே நாங்கள் ஜனவரி மாதத்திலேயே கொண்டாடி விட்டோம். வேண்டுமென்றால் நீங்களும் வாங்க சேர்ந்து கொண்டாடுவோம் என கூறியுள்ளது.

மேலும் பிகில் வெற்றியா? எங்களுக்கு சந்தோசம் தான். நாளைக்கு வர தர்பார் வெற்றியா? அதுவும் சந்தோசம் எல்லாமே நம்ம தமிழ் சினிமா தான் எனவும் பதிலளித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.