Controversy of The Family Man Trailer

சமந்தா நடித்துள்ள ஃபேமிலி மேன் படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Controversy of The Family Man Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஃபேமிலி மேன் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கையில் இருந்து வந்த சமந்தா தீவிரவாதத்தில் ஈடுபடுவது போல இருப்பதாகவும் மனோஜ் பாஜ்பாய் அவரை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

டிரைலரை பார்த்த பலரும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ள படத்தினை தடை விதிக்க வேண்டும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.