யோகி பாபு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Contractor Nesamani First Look : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சம்பாத்தியம் பண்ணும் கடும்போட்டியில், மெஸ்சி இறங்கினார், ரொனால்டோ ஏறினார்..

அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படத்தை ஸ்வதீஷ் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ஓவியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

எனக்கு என் நம்பிக்கை இல்ல! – Actress Raai Laxmi Latest Speech | Cinderella Movie Press Meet

தற்போது இந்த திரைப்படத்திற்கு கான்றாக்டர் நேசமணி என டைட்டில் வைத்திருப்பதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஓவியா.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.