நாட்கள் கடந்தும் தொடர் சாதனை படைத்துள்ளது ரஞ்சிதமே பாடல்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் வாரிசு.

நாட்கள் கடந்தும் தொடர் சாதனை படைக்கும் ரஞ்சிதமே பாடல்.. இதுவரை செய்த சாதனை என்ன?? வெளியான அதிரடி தகவல்.!!

வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே என்ற சிங்கிள் ட்ராக் பாடல் வீடியோ வெளியாகி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்புடன் தொடர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

நாட்கள் கடந்தும் தொடர் சாதனை படைக்கும் ரஞ்சிதமே பாடல்.. இதுவரை செய்த சாதனை என்ன?? வெளியான அதிரடி தகவல்.!!

இப்படியான நிலையில் தற்போது இந்த பாடல் 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் 18 லட்சம் லைக்குகளை பெற்று இன்னமும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த விஷயத்தை விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.