Continue eating Limonia acidissima for 21 days
Continue eating Limonia acidissima for 21 days

• விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல் எலும்புகள் வலிமை பெறும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும்.

• தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.

• தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமடையும். வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு ரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது.

• விளாம்பழம் மரத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

• விளாம் பழத்துடன் பனங்கற்கண்டை கலந்து சாப்பிட பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் நீங்கும்.

• விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க வாயுத் தொல்லை நீங்கும்.

• விளம்பரம் விளாம் மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், வாய் கசப்பு போன்றவை நீங்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here