குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நான்காவது சீசன் வரும் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்க உள்ளது.

புகழ், பாலா உள்ளிட்டோர் படங்களில் பிஸியாகி விட்ட காரணத்தினால் இந்த முறை அவர்கள் கோமாளியாக பங்கேற்க போவதில்லை என தெரிய வந்த நிலையில் புதிய கோமாளிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். கோமாளிகளில் ஒருவராக மௌன ராகம் சீரியல் ரவீனாவும் பங்கேற்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது.

  • 1. ஸ்ருஷ்டி டாங்கே
  • 2. Andreanne Nouyrigat – வெளிநாட்டு நடிகை
  • 3. ஷெரின
  • 4. ராஜ் ஐயப்பா
  • 5. சிவாங்கி (இந்த முறை குக்-காக.)
  • 6. VJ விஷால் (பாக்கியலட்சுமி சீரியல் எழில்)
  • 7. காளையன்
  • 8. விசித்ரா
  • 9. கிஷோர் ராஜ்குமார்