தமிழ் சினிமாவில் நயன்தாரா, வினய், சத்யராஜ் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் கனெக்ட்.

மக்களை ஈர்க்கிறதா நயன்தாராவின் கனெக்ட்?? முழு விமர்சனம் இதோ

படத்தின் கதைக்களம் :

வினய் மற்றும் நயன்தாரா கணவன் மனைவியாக வாழ்ந்து வர அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். நயன்தாராவின் தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.

மருத்துவராக பணியாற்றும் வினய் கொரோனா காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையிலேயே தங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடைசியில் அவரே அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறாள்.

தந்தையை இழந்து தவிக்கும் அவரது மகள் அப்பாவிடம் பேச வேண்டும் ஆசையில் ஓஜா பலகையுடன் அப்பாவின் ஆவியுடன் பேச முடிவெடுக்க அவளது இந்த முயற்சியால் ஒரு சிக்கல் உருவாகி விடுகிறது. அது என்ன சிக்கல் அதிலிருந்து இவர்கள் நின்றார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திகிலூட்டும் கதைக்களம்.

படத்தில் நடித்துள்ள வினய் மற்றும் நயன்தாரா எதார்த்தமான நடிப்பை கொடுக்க அப்பாவை இழந்த பரிதாபத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார் ஹனியா நக்பீஸ். விதவை மகளின் நிலையை கண்டு கஷ்டப்படும் தந்தையாக எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார் சத்தியராஜ்.

மக்களை ஈர்க்கிறதா நயன்தாராவின் கனெக்ட்?? முழு விமர்சனம் இதோ

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. இயக்குனர் அஸ்வின் சரவணன் திகில் ஓட்டும் திரைப்படம் ஆக கனெக்ட் திரைப்படத்தை கொண்டு செல்ல வேண்டும் என முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் மக்களுடன் இன்னும் நன்றாகவே கனெக்ட் ஆகி இருக்கும் என சொல்லலாம்.

படத்தின் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அடுத்து நடக்கப்போவது என்ன என்பது எளிதில் யூகிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது தான் படத்தின் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.