Congress MP Vasanthakumar Passes Away
Congress MP Vasanthakumar Passes Away

கொரானா தொற்றால் கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்பியான வசந்த் குமார் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Congress MP Vasanthakumar Passes Away : இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாதாரண மக்களைப் போலவே பல அரசியல் பிரமுகர்களும் எம்எல்ஏக்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சில அரசியல் பிரமுகர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தகுமார் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த இவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தொண்டர்களும் வசந்த் குமார் அவர்களின் தொண்டர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்பியான வசந்தகுமாரின் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.