நிச்சயதார்த்தத்தை உறுதி செய்யும் வகையில் நாகர்ஜுனா புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நாகர்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களில் திருமணம் பந்தம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நாக சைதான்யா நீண்ட நாட்களாக சோபிதா துலிபாலாவை காதலித்து வந்ததாகவும் இன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் நாக சைதன்யாவுக்கும் சோபித்த துலிபாலாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை சந்தோஷமாக அறிவிக்கிறேன். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தம்பதிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மேலும் இவர்களுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.