மாநாடுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தளபதி 69 படத்தில் இறுதியாக நடிக்க உள்ளார். அதன் பிறகு முழு நேர வேலையாக அரசியலில் ஈடுபட உள்ளார்.
சமீபத்தில் இவரது கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியானது. விரைவில் மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை கிராமத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் மாநாடுக்காக 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.அதற்கான வாகனங்கள் நிறுத்தும் இடமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த அறிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.