Commonwealth Games 2019 : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, Table Tennies

Commonwealth Games 2019 :

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முன்னேறின.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 21வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.

இதன் ஆண்கள் அணிகளுக்கான முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர் அணிகளை வீழ்த்தியது.

பாட்டியாக மாறிய குஷ்பூ, ப்ரியா பவானி ஷங்கர் – வைரலாகும் புகைப்படங்கள்.!

பின், ‘சூப்பர்-8’ சுற்றுக்கான ‘எப்’ பிரிவில் இலங்கை, மலேசியா அணிகளை தலா 3-0 என வீழ்த்திய அஜந்தா சரத் கமல், சத்தியன் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

பெண்கள் அணிகளுக்கான முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி, இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகளை வீழ்த்தியது. பின், ‘சூப்பர்-8’ சுற்றுக்கான ‘எப்’ பிரிவில் மலேசியா, வேல்ஸ், நைஜீரியா அணிகளை தோற்கடித்த மணிகா பத்ரா, மாதுரிகா பத்கர், அர்ச்சனா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here