Common wealth Games : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News,Mirabai

Common wealth Games : 

மகளிர் சீனியர் 49 கிலோ எடை பிரிவில்,  காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரின் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.

சமோவாவில் நேற்று தொடங்கிய இந்த தொடரில், மீராபாய் மொத்தம் 191 கிலோ எடை தூக்கி (ஸ்நேட்ச் 84 கிலோ + கிளீன் & ஜெர்க் 107 கிலோ) முதலிடம் பிடித்தார்.

மகளிர் சீனியர் 45 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை ஜில்ல தலாபெஹரா மொத்தம் 154 கிலோ எடை தூக்கி (70 கிலோ + 94 கிலோ) தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

சிக்கன் சால்னா செய்வது எப்படி? தெரிந்து கொள்வோமா!

மகளிர் சீனியர் 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனைகள் சொராய்கைபம் பிந்த்யராணி தங்கப் பதக்கமும், மட்சா சந்தோஷி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஆண்கள் சீனியர் 55 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரிஷிகாந்தா சிங் மொத்தம் 235 கிலோ எடை தூக்கி (105 கிலோ + 130 கிலோ) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

முதல் நாளிலேயே சீனியர், ஜூனியர் மற்றும் யூத் பிரிவுகளில் இந்திய அணியினர் 8 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை அள்ளி அசத்தியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.