Common Dp for Atlee Birthday
Common Dp for Atlee Birthday

அட்லியின் பிறந்தநாள் விருந்தாக காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Common Dp for Atlee Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.

இவர் அடுத்ததாக பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின வண்ணம் உள்ளன.

இயக்குநர் அட்லியின் திருமண விழாவில் விஜய் பாட்டுக்கு செம குத்து குத்திய சிவகார்த்திகேயன் – வைரலாகும் அரிய வீடியோ!

மேலும் இன்று அட்லியின் பிறந்த நாள் என்பதால் இந்த படம் பற்றிய அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க தற்போது பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அட்லியின் பிறந்தநாள் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த காமன் டிபி புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த காமன் டிபி புகைப்படமும் பதிவும்