Commission summons to UK doctor
Commission summons to UK doctor

Commission summons to UK doctor – சென்னை: ‘ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அவர்களுக்கு விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளது.

அதில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே வரும் 9ம் தேதி ஆஜராகுமாரும், தம்பிதுரை வரும் 11ம் தேதி ஆஜராகுமாரும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை அப்போல்லோ மருத்துவர்கள் , ஜெயலலிதா உறவினர்கள், தொண்டர்கள் என பலரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஜனவரி 9ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில், ‘ரிச்சர்ட் பீலே லண்டனில் இருக்கிறார்,மேலும் சிகிச்சைகளுக்காக அவர் வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய நிலையில் இருப்பதனால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது’!

இதற்காக விசாரணை ஆணையம் அமைத்திருக்க கூடிய வளாகத்திலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக? வழக்கறிஞர் மற்றும் நீதிபதி கேட்கக்கூடிய கேள்விகளுக்கு ரிச்சர்ட் பீலே ஆஜராகி பதில் அளிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 18ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அங்கு ஆஜராகவில்லை.

எனவே, தற்போது ஜனவரி 7- ம் தேதி விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், வரும் 8- ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்கான பணிகளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.