Comicstaan Sema Comedy Pa Contestants :
Comicstaan Sema Comedy Pa Contestants :

மாயாண்டி கருணாநிதி

Comicstaan Sema Comedy Pa Contestants : பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட் அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.

சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களை சிரிக்க வைத்துள்ளார்.

அடிப்படையில் மாயாண்டி ஒரு சோம்பேறி நபர். தற்போது, ‘தள்ளிப் போடுவதை நிறுத்தி இன்றே கடின உழைப்பு செய்யுங்கள்’ என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். 2055-ஆம் ஆண்டு இதை பிரசுரிக்கும் திட்டம் வைத்துள்ளார். இப்போதைக்கு இவரது திட்டம், அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சி மூலம் மக்களை சிரிக்க வைப்பதுதான்.

யோகேஷ் ஜகன்னாதன்

தன் நண்பர்கள் மத்தியில் யோகி என்று அறியப்படும் யோகேஷ் ஜகன்னாதன், கடினமான உழைப்பாளி. ஒவ்வொரு நாளும் 70 கிலோமீட்டர், 4 மணி நேர பயணம் மேற்கொண்டு ஸ்டான்ட் அப் காமெடிக்கான ஓப்பன் மைக் வாய்ப்புக்குச் செல்கிறார்.

நகைச்சுவைக்கான இவரது வாழ்க்கை கடினம் தான். அங்கு ஓப்பன் மைக்கில் 4 நிமிடங்கள் இவர் பேசுகிறார். அதுவும் நான்குக்கும் குறைவான ரசிகர்களுக்கு. அதில் ஒன்றுக்கும் குறைவான சிரிப்பே கிடைக்கும்.

ஆம், அதுதான் இவரது தினசரி வாழ்க்கை. ரயில், பேருந்து, ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து, பின் அதி வேகமான மாஸ் ஹீரோ பாடல்களைக் கேட்டபடியே நடப்பார்.

அப்படி நடக்கும் போது தான் எவ்வளவு சிறப்பாக நகைச்சுவை செய்வோம் என்று நினைத்துப் பார்ப்பார். ஆனால் நிகழ்ச்சி மோசமாக நடந்து முடிந்த பின், சோகமான பாடல்களை கேட்டு நடந்தபடியே வீட்டுக்குச் செல்வார்.

அவர் புகழ், அவரை எவ்வளவு பேருக்குத் தெரியும் என்பதையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும் போது, அவரைப் பற்றி அவர் மட்டுமே எழுதித் தர முடியுமே தவிர வேறு வழியில்லை.

காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் நடுவர்களையும், ரசிகர்களையும் இவரால் சிரிக்க வைக்க முடியுமா? வரும் செப்டம்பர் 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் பாருங்கள்.

ஸ்யாமா ஹரிணி

கார்த்திக் குமார், எஸ் ஏ அரவிந்த் மற்றும் பார்க்கவ் ராமகிருஷ்ணன் ரசிகையான ஸ்யாமா ஹரிணி, இவர்களின் சில நிகழ்ச்சிகளை சென்னையில் நேரடியாக பார்த்த பின் ஸ்டான்ட் அப் காமெடியில் களமிறங்க முடிவு செய்தவர்.

இவர் மைக்கைக் கையில் பிடிக்கக் காரணம், இவரது புலம்பல்களை வேறெப்படியும் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதால் தான். பல கஃபேக்களில், பப்களில், தற்போது சென்னையின் காமெடி க்ளப்களில் ஸ்யாமா நிகழ்ச்சிகள் செய்துள்ளார்.
நகைச்சுவையாலர் சாய் கிரணுக்காக, அவரது நிகழ்ச்சியை சிறிய நகைச்சுவை பேச்சுடன் துவக்கி வைத்துள்ளார்.

தனது தாய் மொழியான தெலுங்கில் தன்னால் சரளமாகப் பேச முடிகிறது என்பதால், தெலுங்கில் ஸ்டான்ட் அப் காமெடி செய்ய வேண்டும் என்று ஸ்யாமா ஆசைப்படுகிறார்.

மேடை நாடகங்களிலும் ஸ்யாமா நடித்து வருகிறார். அதை முழு ரசனையோடு செய்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில், ரசிகர்களை தரையில் புரண்டு சிரிக்க வைக்கும் ஸ்யாமாவின் நகைச்சுவையைப் பார்த்து ரசியுங்கள்.

அபிஷேக் குமார்

இந்தப் பட்டியலில் பிரபலமான பெயர்களில் ஒன்று அபிஷேக் குமார். பெக்கி என்று பலரால் அழைக்கப்படுகிறார். தொழில் முறை ஸ்டான்ட் அப் காமெடி செய்பவர், நடிகர் மற்றும் மேடை நாடக நடிப்பு பயிற்சியாளர். சென்னையைச் சேர்ந்த அபிஷேக், அவரது அதி உற்சாகமான நகைச்சுவை, உடல் சார் நகைச்சுவை மற்றும் குடும்பங்களுக்குப் பிடித்த சுத்தமான நகைச்சுவைக்குப் பெயர் பெற்றவர்.

அபிஷேக்கின் முதல் நிகழ்ச்சி ஒரு விபத்தே. நகைச்சுவை செய்யவிருந்த ஒரு நகைச்சுவையாளர் வர முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக அபிஷேக் மேடையேறினார். அந்த 15 நிமிட நிகழ்ச்சிக்குப் பின், அபிஷேக் கிட்டத்தட்ட 100 ஸ்டான்ட் அப் நிகழ்ச்சிகளுக்கும் அதிகமாக மேடையேற்றியுள்ளார்.

வெப் சீரிஸ், தொழில் முறை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இவர் பங்கேற்றுள்ளார். அரவின் எஸ் ஏ, கார்த்திக் குமார், பிரவீன் குமார், நவீன் ரிச்சர்ட், அஸீம் பன்னத்வாலா, சோனாலி தாக்கர், அபீஷ் மாத்யூ உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவையாளர்களின் நிகழ்ச்சிகளில் சிறிய அறிமுக நகைச்சுவை நிகழ்ச்சியுடன் துவக்கி வைத்துள்ளார்.

தமிழ் நகைச்சுவை சூழலில் அடுத்த பெரிய பிரபலம் அபிஷேக் தான் என்கிற வதந்தி உலவி வருகிறது. அபிஷேக் பல வதந்திகளையும் உலவ விடுவதில் பெயர் பெற்றவர். அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் மேடையேற தயாராக இருக்கும் அபிஷேக், இந்நிகழ்ச்சியின் நம்பிக்கைக்குரிய போட்டியாளர்களில் ஒருவர்.

கார்த்திகேயன் துரை

சென்னை ஆவடியின் நகைச்சுவையான ஆண்களில் ஒருவர் கே.டி என்கிற கார்த்திகேயன் துரை. சென்னையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் கே.டி, இங்கிருக்கும் பல பிரபலமானவர்களின் நிகழ்ச்சிகளில் அறிமுகம் கொடுத்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, மிகவும் அழகான, மிகவும் வேடிக்கையான நகைச்சுவையாளர் என்று அவரது அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது அம்மாவோ இவரது நிகழ்ச்சிகளை, ஏன் ஒத்திகைகளைக் கூட பார்த்ததில்லை.

கே.டி தனது வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து அவதானித்து கதை சொல்லும் நகைச்சுவை செய்பவர். இந்த வகை நகைச்சுவை பல ரசிகர்களைச் சென்றடையும், ஏன் பிறக்காத குழந்தைக்குக் கூட புரியும். ஆம், இதுதான் இவரது திறமை. அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் மட்டுமே இவர் தனது திறமைகளை மேடையேற்றுவதைப் பார்க்க முடியும். பாருங்கள்.

அண்ணாமலை லக்‌ஷ்மணன்

அண்ணாமலை லக்‌ஷ்மணன் என்கிற மல, முறையான ஸ்டான்ட் அப் காமெடியில் முதல் தமிழ் மொழி பேசிய ஸ்டான்ட் அப் நகைச்சுவையாளர்.

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – வருத்தத்தில் திரையுலகம்..!

ஓப்பன் மைக், பொது நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை செய்திருப்பவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் நகைச்சுவை ஆகிய மூன்று மொழிகளை சரளமாகப் பேசுபவர். (இதில் நகைச்சுவை என்பது நகைச்சுவைக்காக குறிப்பிடப்பட்டுள்ளது).

எழுத்தாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அண்ணாமலை தற்போது முழு நேர நகைச்சுவையாளராக மாறிக் கொண்டிருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன ஆனால் தனது மக்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் மீதான அவரது அன்பு மட்டுமே நிலையாக உள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் அண்ணாமலையைக் காணத் தயாராகுங்கள். உங்களுக்கு கிச்சுகிச்சு மூட்ட அவர் தயாராக இருக்கிறார்.

1
2
3
4
5
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.