Walt Diney
வெறும் 20 வயதே ஆள உலக புகழ் பெற்ற இளம் நடிகர் தூக்கத்திலேயே மரணமடைந்த சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comeron Boyce Death : டிஸ்னியின் திரைப்படங்களுக்கும் கார்ட்டூன்களுக்கும் உலகம் முழுவதும் மாபெரும் ரசிகர்கள் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அதே போல் இந்த டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலமாக உலக புகழ் பெற்ற நடிகரான வெறும் 20 வயதே ஆன நடிகர் கேமரூன் பாய்ஸ்.

இவர் சமீப காலமாக மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கேமரூன் மரணமடைந்ததை அவரது செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். வெறும் 20 வயதிலேயே இளம் நடிகர் மரணமடைந்த சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் கேமரூனை கிட்டத்தட்ட 13 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வயதிலேயே இப்படியொரு புகழ் பெற்ற நடிகராக வலம் வந்த கேமரூனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

Disney Cameron Boyce

Cameron Boyce
Cameron Boyce
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.