YouTube video

Comedy Actor Vadivel Bajali Funeral – Emotional Moments

Vadivel Balaji Funny Videos : தமிழ் சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி. அதிலும் குறிப்பாக இவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலபடுத்தியது விஜய் டிவி நிகழ்ச்சிகள் தான்.

கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் இவரின் பங்களிப்பு மிக மிக அதிகம். வடிவேல் பாலாஜியின் நையாண்டி தனமான பேச்சைக் கேட்டு சிரிக்காதவர்களே இருக்க வாய்ப்பில்லை.

தற்போது வெறும் 42 வயதாகும் இவர் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகம், நண்பர்கள் வட்டாரம், ரசிகர்கள் பட்டாளம் என அனைத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரை நினைவு கூறும் வகையில் ரசிகர்கள் வடிவேல் பாலாஜியின் காமெடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருத்தப்பட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.