Comedy Actor Senthil in first movie

காமெடி நடிகரான செந்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்க உள்ளார்.

Comedy Actor Senthil in first movie : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் செந்தில். தனது வெகுளித்தனமான நடிப்பின் மூலம் 80 மற்றும் 90களில் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் செந்தில்.

இவர் ஏறத்தாழ 250 க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் ஜென்டில்மேன், நாட்டாமை, கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், போன்ற வெற்றி படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

ஆனால் தற்போது செந்தில் இயக்குனர் சந்தோஷ் சங்கையா உடன் இணைந்து ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் செந்தில் ஆயுள் தண்டனைக் கைதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளது. இதனால் செந்தில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.