ரஜினியின் பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் அதில் கட்டாயமாக அஜித் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று காமெடி நடிகர் கருணாகரன் மேடையில் அடித்து பேசியுள்ளார்.

1995தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “பாட்ஷா”. இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட்டையும், செல்வாக்கையும் உயர்த்திய படமாகும். இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அதேபோல்தான் வில்லனாக நடித்த ரகுவரனின் ஆண்டனி கதாபாத்திரமும் ரசிகர்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சொல்லலாம்.

பாட்ஷா படத்தின் ரீமேக்கில் அஜித் தான் கட்டாயம் நடிக்க வேண்டும்!… மேடையில் அடித்து பேசிய காமெடி நடிகரின் வைரல் அப்டேட்.

தேவாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரட்டாக தற்போது வரையும் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ரஜினிக்கு தன் படங்களில் இரண்டாம் பாகம் நடிப்பதில் விருப்பமில்லை. மேலும் இந்த பாட்ஷா படத்தை போல் ஒரு படத்தை மீண்டும் பண்ண முடியாது என்று இப்படத்தில் இயக்குனரும் தெரிவித்திருந்தார். அதனால் இப்படத்தின் ரீமேக் ஆவது வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாட்ஷா படத்தின் ரீமேக்கில் அஜித் தான் கட்டாயம் நடிக்க வேண்டும்!… மேடையில் அடித்து பேசிய காமெடி நடிகரின் வைரல் அப்டேட்.

இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் குறித்தும் இதில் யார் நடிக்க வேண்டும் என்பதை குறித்தும் காமெடி நடிகர் கருணாகரன் ஒரு மேடையில் கூறியுள்ளார். அதாவது ரஜினியின் பாட்ஷா படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் கண்டிப்பாக அஜித் தான் நடிக்க வேண்டும் என்று அவர் ஆசையை கூறியிருந்தார். ஏனென்றால் ஏற்கனவே ரஜினியின் “பில்லா” படத்தின் ரீமேக்கில் அஜித் தான் நடித்திருந்தார்.

பாட்ஷா படத்தின் ரீமேக்கில் அஜித் தான் கட்டாயம் நடிக்க வேண்டும்!… மேடையில் அடித்து பேசிய காமெடி நடிகரின் வைரல் அப்டேட்.

அதில் அவரின் நடிப்பும், ஸ்டைலும் ரஜினியைப் போல் இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் ரஜினியின் மாஸ் படமான பாட்ஷா படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என கருணாகரன் கூறியதை தொடர்ந்து தற்போது ரசிகர்களும் கூறி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.