Comedy Actor Ashwin Marriage Photo
Comedy Actor Ashwin Marriage Photo

காமெடி நடிகரான அஸ்வின் ஊரடங்கில் தன்னுடைய காதலியை கரம் பிடித்து உள்ளார்.

Comedy Actor Ashwin Marriage Photo :தமிழ் சினிமாவில் கும்கி, ஈட்டி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் சில படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தவர் அஸ்வின்.

பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுவாமி நாதனின் மகன் தான் இந்த அஸ்வின்.

இவர் சென்னை கேகே நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள் வித்யா ஸ்ரீ என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா ட்வீட்.. சூர்யாவின் அடுத்த படம் பற்றி வெளியான மாஸ் அப்டேட்!

இருவீட்டாரின் சம்மதத்துடன் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அஸ்வின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று ( ஜூன் 24 ) தமிழக அரசின் அறிவுரைகளில் படி வெறும் 20 பேர் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஸ்வின் திருமணத்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.