Comali Movie Release Struggle : jayam Ravi , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
சிவகார்த்திகேயன் படத்தால் வந்த நஷ்டத்தால் ஜெயம் ரவியின் திரைப்படம் பிரச்சனையில் சிக்கி கொண்டுள்ளது.

Comali Movie Release Struggle : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக அடங்கமறு என்ற திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை அடுத்து இவர் தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சக்தி பிலிம்ஸ் பேக்டரி வாங்கி வெளியிட உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி – ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!

தற்போது கோமாளி படத்தை ரிலீஸ் செய்ய திருச்சி, மதுரை பகுதியை சேர்ந்த விநியோகிஸ்தர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் சக்தி பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தான் இறுதியாக வெளியான Mr. லோக்கல் திரைப்படத்தால் இவர்களுக்கு 80% நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் அதனை ஈடுகட்டினால் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்வோம் என திட்டவட்டமாக கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் படத்தால் வந்த பிரச்சனைக்கு ஜெயம் ரவியின் படம் பலிக்கடாவாகி விட்டதே என ஜெயம் ரவி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.