Comali Movie Release Date : Baahubali 2, Thala Ajith, Prabahs, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
பாகுபலி பிரபாஸ் படத்துடன் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் நேருக்கு நேராக மோத இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Comali Movie Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அடங்கமறு படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் கோமாளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க காஜல் அகர்வால் சம்யுக்தா ஹெக்டே, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை பாடலில் இதை கவனித்தீர்களா – எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிட்டாங்க!

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இதனை ஜெயம் ரவியும் ட்வீட் மூலமாக உறுதி செய்துள்ளார்.

ஆகஸ்ட் 1ம் தேதியோ அல்லது ஆகஸ்ட் 10-ம் தேதியோ அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வெளியாக உள்ளது. மேலும் இதே ஆகஸ்ட் 15-ல் பிரபாஸின் சாஹோ திரைப்படமும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.