Comali Movie Poster : Actor Jayam Ravi | Kajal Agarwal | Pradeep Ranganathan | Kollywood | Tamilcinema | Latest Cinema News

Comali Movie Poster :

அண்மையில் வெளியான கெட்டப்பில் ஜெயம் ரவியும் காஜல் அகர்வாலும் ஆடையே இல்லாமல் ஆதாம் ஏவாலாக நடித்திருப்பதாக உணர்த்தப்படுகிறது.

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

அஜித்தாக மாறும் விஜய், ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடிக்கிறார். இதில் ஒவ்வொரு கெட்டப்பாக படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

இதில் அண்மையில் வெளியான கெட்டப்பில் ஜெயம் ரவியும் காஜல் அகர்வாலும் ஆடையே இல்லாமல் ஆதாம் ஏவாலாக நடித்திருப்பதாக உணர்த்தப்படுகிறது.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.