Comali is not Releasing on June : Jayam Ravi | Kajal Aggarwal | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Comali is not Releasing on June :

இப்படம் ஜூன் 28-ஆம் தேதி வெளியாகும் என ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவியது ஆனால் இப்படத்தின் இயக்குனர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தலைவா பார்ட் 2 எடுக்க விரும்பும் விஜய் – ரசிகர்களுக்கு செம விருந்து!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடிக்கிறார். இதில் ஒவ்வொரு கெட்டப்பாக படக்குழு வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்படம் ஜூன் 28-ஆம் தேதி வெளியாகும் என ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவியது ஆனால் இப்படத்தின் இயக்குனர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் தற்போது தான் போஸ்டரை வெளியிட ஆரம்பித்திருக்கிறோம் படம் வெளியாக தாமதமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.