pradeep
நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கிய இளம் இயக்குனர் பிரதீப் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.

Comali director pradeep next movie update – தனி ஒருவன் திரைப்படத்திற்கு பின் ஜெயம்ரவிக்கு மாபெரும் வெற்றிப்படமாக திரைப்படம் கோமாளி. இன்னும் சொல்லப்போனால் தனி ஒருவனை விட இப்படம் அதிகம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இளம் இயக்குனர் பிரதீப் இயக்கியிருந்தார்.

என் மார்பகத்தை காட்ட சொன்ன இயக்குனர் – நடிகை பரபரப்பு பேட்டி

16 வருடங்களாக கோமாவில் இருந்து வந்த ஜெயம்ரவி சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கூறியிருந்ததால் இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

pradeep

கோமாளி படம் வெற்றி பெற்றுவிட்டதால் ஐசரி கணேஷ் அடுத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரதீப்பே இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மேலும், இப்படத்தில் யார் யார் நடிக்கவுள்ளார்கள் என்கிற தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.