
ஒரே வாரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார் கோமாளி ஒருவர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது.

இதுவரை கோமாளியாக பங்கேற்று வந்த சிவாங்கி இந்த முறை குக்காக என்ட்ரி கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் புதிய கோமாளிகளாக சிங்கப்பூர் தீபன், சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் களத்தில் இறங்கி உள்ளனர்.
ஆனால் ஒரே வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஓட்டேரி சிவாவை விஜய் டிவி நீக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்குக் காரணம் அவருடைய குடிபோதை தான் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து குடிபோதையில் இருக்கும் ஓட்டேரி சிவா சூட்டிங் ஸ்பாட்டிலும் கட்டுப்படுத்துவது கஷ்டமான விஷயமாக இருப்பதால் அவரை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக தங்கதுரையை விஜய் டிவி களம் இறக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வார எபிசோடில் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.