Comali Box Office Collection Report
Comali Box Office Collection Report

ஜெயம் ரவி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோமாளி படத்தின் பட்ஜெட், பாக்ஸ் ஆபிஸ் வசூல், மற்றும் படத்தின் லாபம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Comali Box Office Collection Report : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ரவி தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து விடுகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்திருந்தனர். யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சூர்யா-கௌதம் மேனன் இடையான பிரச்சனைக்கு காரணம் என்ன? பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை!

ரூபாய் 25 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் வசூல் வேட்டையடி ரூபாய் 65 கோடி வசூலை பெற்றுள்ளது. இதன் மூலம் படக்குழுவினருக்கு கிட்டத்தட்ட 20 கோடிக்கு மேல் லாபத்தைக் கொடுத்துள்ளது.

அதேபோல் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன், அடங்கமறு, சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும் போன்ற பல திரைப்படங்கள் நல்ல ஹிட் கொடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது பூமி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தினை லட்சுமணன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட்டடித்த படங்களில் லிஸ்ட்

  1. ஜெயம்
  2. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
  3. உனக்கும் எனக்கும்
  4. சந்தோஷ் சுப்ரமணியம்
  5. பேராண்மை
  6. தனி ஒருவன்
  7. அடங்கமறு