Colors Tamil

Colors Tamil : அடேய் இது தான் இவ்வளவு பில்டப் பண்ணீங்களா? என கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலை நெட்டிசன்கள் சிலர் விளாசி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ள சேனல் தான் கலர்ஸ் தமிழ்.

இந்த சேனலில் நயன்தாரா கலந்து கொள்ள போவது போல போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பி இருந்தனர்.

மிஸ்டர் லோக்கல் தள்ளிபோக இந்த படம்தான் காரணமா? வெளிவந்த புதிய தகவல்!

பலரும் நயன்தாரா ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருவார், அல்லது அவரை பேட்டி எடுத்திருப்பார்கள் என கூறி வந்தனர்.

ஆனால் அந்த போஸ்டருக்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளது கலர்ஸ் தமிழ். அதாவது நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் மே 12-ம் தேதி இந்த சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்காக தான் நயன்தாரா ஆன் கலர்ஸ் என்ற பெயரில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.